≡ Menu

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று பரவளின் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை புதுச்சேரி பல்கலைக்கத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் ஏப்ரல் 19 தேதி முதல்  திட்டமிடப்பட்ட அனைத்து கோட்பாடு மற்றும் நடைமுறை தேர்வுகளையும் ஒத்திவைத்துள்ளது. புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டாளர் அறிவித்துள்ளார்.

 

கொரோனா அதிகரிப்பால் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஜிப்மர் மருத்துவமனை ஆகியவற்றில் நோயாளிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.

புதுச்சேரியில் கடந்த மார்ச் 31-ந் தேதி மருத்துவமனையில் 294 பேரும் வீட்டு தனிமையில் 780 பேர் உள்பட 1074 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

கடந்த 17 நாட்களில் கொரோனா பரவல் அதிகரித்து 5640 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 23 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். சிகிச்சை முடிந்து சென்றவர்களை தவிர்த்து தற்போது 721 பேர் மருத்துவமனையிலும் 3369 பேர் வீட்டு தனிமை உள்பட 4090 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா அதிகரிப்பால் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஜிப்மர் மருத்துவமனை ஆகியவற்றில் நோயாளிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ரத்த அழுத்தம் நீரழிவு நோய் உள்ளிட்ட இணை நோய் உள்ளவர்கள் மட்டும் மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர்.

மற்றவர்கள் வீட்டில் தனிமையில் இருக்க அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதே வேகத்தில் தொற்று பரவினால் இந்த மாதம் இறுதியில் மருத்துவமனையில் 3 ஆயிரம் பேரும், 6 ஆயிரம் பேர் வீடுகளிலும் இருக்க வாய்ப்புள்ளதாக கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கேற்றார்போல் படுக்கை வசதிகள் மற்றும் வெண்டிலேட்டர்களை தயாராக வைத்திருக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது தினசரி 500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதால் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகங்கள் திணறி வருகின்றன.

பார்வையற்றோர், பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமெரிக்க இதழ் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது.

கொரோனா வைரஸ் தொற்று 2-வது அலை தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது.

இந்நிலையில் பார்வையற்றோர், பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமெரிக்க இதழ் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது.

இதனடிப்படையில் புதுவை அரவிந்த் கண் மருத்துவமனையும் கள ஆய்வு செய்தது. ஆய்வு முடிவுகளை வெளியிட்ட அண்ணாமலை உடையப்பன் கூறியதாவது:-

232 நபர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. பார்வையற்றோர், அதிகம், குறைவான பார்வை குறைபாடு உள்ளவர்கள், குறைபாடு இல்லாதவர்கள் என பல பிரிவுகளின் கீழ் ஆய்வு செய்யப்பட்டது.

பார்வை குறைபாடு கவலை, மனச்சோர்வுடன் தொடர்புடையது. இவ்வாறு உள்ளவர்கள் கொரோனாவால் பெரும் பிரச்சனைகளை எதிர் கொள்கின்றனர். அவர்கள் மோசமான விளைவுகளால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது தெரியவந்துள்ளது.

பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று அதிக ஆபத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளது. இவர்கள் தாங்களாக சென்று மருத்துவரை அணுகுவதும் குறைவாக உள்ளது.

பார்வை குறைபாடு உள்ளவர்கள் தங்கள் வருவாய் ஆதாரமான வேலைக்கு முக்கியத்துவம் தருகின்றனர். வீடியோ கான்பரன்சிங், வீடியோ காட்சிகளை காண முடியாதது, கொரோனா பற்றி பிரெய்லியில் பதிவுகள் இல்லாதது பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு மிகுந்த சவாலாக உள்ளது.

அவசரகால பயன்பாட்டுக்கு ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசின் நிபுணர் குழு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, 10 கோடி தடுப்பூசிகள் ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. [continue reading…]

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் அனைத்து மத தலைவர்களுடன் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டத்தில் மத தலைவர்கள் பலர் பங்கேற்று தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.

ரமலான், தமிழ் புத்தாண்டு, சித்திரை மாத விழாக்களையொட்டி வழிபாட்டுத் தலங்களை இரவு 10 மணி வரை திறக்க கோரிக்கை விடுத்தனர். இதனால் அவர்களின் கோரிக்கையை ஏற்று வழிபாட்டு தலங்களில் இரவு 10 மணி வரை தரிசனம் செய்ய அனுமதி.

அதே வேளையில் அனைவரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். தனிமனித இடைவெளியை கடைப் பிடிக்க வேண்டும். என்பது உள்ளிட்ட விதிகளை கடைபிடிக்க கோரிக்கை வைத்து இரவு 8 மணி வரை என்பதை 10 மணி வரை வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பக்தர்களுக்காக 2 மணி நேரம் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் புதுச்சேரியில் 100 இடங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.

புதுச்சேரியில் சனிக்கிழமை இரண்டு COVID-19 இறப்புகளும் 272 புதிய வழக்குகளும் பதிவாகியுள்ளன. இங்குள்ள மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரியில் 87 வயதான ஒருவர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. காரைக்காலில் உள்ள பொது மருத்துவமனையில் மேலும் 72 வயது நபர் இறந்தார். அவர்கள் இருவருக்கும் இணை நோய்கள் இருந்தன என்று சுகாதாரத் துறை  தெரிவித்துள்ளது.

சமீபத்திய இறப்புகளுடன், COVID-19 காரணமாக ஏற்பட்ட எண்ணிக்கை 689 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில்  மட்டும் 555 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பள்ளி கல்வித்துறை பிறப்பித்துள்ள உத்தரவில், 93 அரசு, தனியார் பள்ளிகளில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் வகையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்க வேண்டும்.

புதுவையில் இன்று ஞாயிற்றுக்கிழமை 11-4-2021 முதல் 14-ந் தேதி வரை மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

புதுவை பிராந்தியத்தில் 23 தொகுதிகளில் 93 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை கொரோனா தடுப்பூசி மையங்களாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது

புதுச்சேரியில் வரும் 14ம் தேதி வரை கொரோனா தடுப்பூசி திருவிழா நடக்கிறது; தகுதியான அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என, கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார். [continue reading…]

புதுச்சேரி; புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் 180 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.புதுச்சேரியில் நேற்று முன்தினம் 2702 பேருக்கு நடத்திய கொரோனா பரிசோதனையில், புதுச்சேரியில் 144 பேர், காரைக்காலில் 31, ஏனாமில் 2, மாகியில் 3 பேர் உட்பட 180 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மாநிலத்தின் மொத்த பாதிப்பு 42 ஆயிரத்து 539 ஆனது. 390 பேர் மருத்துவமனையிலும், 1287 பேர் வீடுகளில் சிகிச்சையில் உள்ளனர்.நேற்று முன்தினம் புதுச்சேரியில் 60, காரைக்காலில் 34, மாகியில் ஒருவர் உட்பட 95 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இது வரை 40 ஆயிரத்து 178 பேர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளனர். நேற்று இறப்பு இல்லை. மாநிலத்தின் உயிரிழப்பு 684 ஆக உள்ளது.நேற்று முன்தினம் 48 சுகாதார பணியாளர்கள், 9 முன் கள பணியாளர்கள், 374 பொது மக்கள் உட்பட இது வரை 80 ஆயிரத்த 629 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட் டுள்ளது.