≡ Menu

புதுவையில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் | MK Stalin’s campaign in Puducherry

புதுச்சேரி – கடலூர்  சாலையில் உள்ள AFT திடலில் தி.மு.க பிரச்சார பொதுக்கூட்டம் 3/4/2021 நடந்தது. இதில்  தி.மு.க தலைவர்  ஸ்டாலின் பங்கேற்று தேர்தல் பரப்புரை நிகழ்த்தினார்.

புதுவை சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், தி.மு.க. 13 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

புதுவையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்  பிரசாரம். அவர் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசினார்.

புதுச்சேரியில் மதச்சார்பற்ற அணியில் காங்கிரஸ், தி.மு.க, சி.பி.ஐ, விடுதலைச் சிறுத்தைகள்  அணியின்  29 வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பேசினார். பொதுக்கூட்ட மேடை ஏறாமல் வேனில் இருந்தபடி பேசிய ஸ்டாலின், ‘தமிழகத்தில் 234 தொகுதிகளில் 55 கூட்டங்களில் பேசி உள்ளேன். இன்று 56வது கூட்டத்தில் பேசுகிறேன். தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தலில் மதசார்பற்ற அணி மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறது. அதுபோல் புதுச்சேரியிலும் வெற்றியை தேடி தர வேண்டும் என்றார்.