≡ Menu

புதுச்சேரியில் நேற்று 180 பேருக்கு கொரோனா தொற்று | 180 confirmed covid cases in Puducherry

புதுச்சேரி; புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் 180 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.புதுச்சேரியில் நேற்று முன்தினம் 2702 பேருக்கு நடத்திய கொரோனா பரிசோதனையில், புதுச்சேரியில் 144 பேர், காரைக்காலில் 31, ஏனாமில் 2, மாகியில் 3 பேர் உட்பட 180 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மாநிலத்தின் மொத்த பாதிப்பு 42 ஆயிரத்து 539 ஆனது. 390 பேர் மருத்துவமனையிலும், 1287 பேர் வீடுகளில் சிகிச்சையில் உள்ளனர்.நேற்று முன்தினம் புதுச்சேரியில் 60, காரைக்காலில் 34, மாகியில் ஒருவர் உட்பட 95 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இது வரை 40 ஆயிரத்து 178 பேர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளனர். நேற்று இறப்பு இல்லை. மாநிலத்தின் உயிரிழப்பு 684 ஆக உள்ளது.நேற்று முன்தினம் 48 சுகாதார பணியாளர்கள், 9 முன் கள பணியாளர்கள், 374 பொது மக்கள் உட்பட இது வரை 80 ஆயிரத்த 629 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட் டுள்ளது.