≡ Menu

100 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் அறிவிப்பு | Covid vaccination camps to be held in 100 places in Puducherry

புதுச்சேரியில் வரும் 14ம் தேதி வரை கொரோனா தடுப்பூசி திருவிழா நடக்கிறது; தகுதியான அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என, கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.

இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரியில் நடந்த ஓட்டல் தொழிலா
ளர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை, கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் நேற்று துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கவர்னரின் ஆலோசகர்கள் சந்திரமவுலி, ஆனந்த்பிரகாஷ் மகேஸ்வரி, சுகாதாரத்துறை செயலர் அருண்,
இயக்குனர் மோகன்குமார் கலந்து கொண்டனர்.
பின், கவர்னர் அளித்த பேட்டி:
பக்கத்து மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், புதுச்சேரியில் மிக தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படஉள்ளது.
புதுச்சேரியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைத்து நட
வடிக்கைகளையும் தீவிரமாக மேற்கொள்கிறோம்.
இதில், அனைவரின் பங்களிப்பு இருக்க வேண்டும். இதற்காக, தனியார்
மருத்துவக் கல்லுாரிகள், இந்திய மருத்துவக் கழகம், சித்தமருத்துவர்கள், தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளோம். சமய பெரியோர்கள், இலக்கியவாதிகள், முக்கிய நபர்கள், பிரபலங்களை அழைத்தும் கூட்டம் நடத்தப்படும்

100 முகாம்கள்:

கொரோனாவை சதவீதம் கட்டுப்படுத்த, நாளை 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை, புதுச்சேரியில் 100 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. அதே போல், 100 இடங்களில் கொரோனா பரிசோதனையும் நடத் தப்படும். தடுப்பூசி விழாவாக கொண்டாடுங்கள். ஆனால், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்