புதுச்சேரியில் வழிபாட்டு தலங்களை இரவு 10 மணி வரை திறக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அனுமதி | In Puducherry, worship places are allowed to open till 10 p.m.  Lieutenant Governor  Dr. Tamilisai Soundararajan.

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் அனைத்து மத தலைவர்களுடன் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டத்தில் மத தலைவர்கள் பலர் பங்கேற்று தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.

ரமலான், தமிழ் புத்தாண்டு, சித்திரை மாத விழாக்களையொட்டி வழிபாட்டுத் தலங்களை இரவு 10 மணி வரை திறக்க கோரிக்கை விடுத்தனர். இதனால் அவர்களின் கோரிக்கையை ஏற்று வழிபாட்டு தலங்களில் இரவு 10 மணி வரை தரிசனம் செய்ய அனுமதி.

அதே வேளையில் அனைவரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். தனிமனித இடைவெளியை கடைப் பிடிக்க வேண்டும். என்பது உள்ளிட்ட விதிகளை கடைபிடிக்க கோரிக்கை வைத்து இரவு 8 மணி வரை என்பதை 10 மணி வரை வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பக்தர்களுக்காக 2 மணி நேரம் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.