புதுச்சேரியில், 17 நாட்களில் 23 பேர் பலி – 5640 கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் | In Puducherry, 23 people died in 17days – 5640 affected by Corona

கொரோனா அதிகரிப்பால் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஜிப்மர் மருத்துவமனை ஆகியவற்றில் நோயாளிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.

புதுச்சேரியில் கடந்த மார்ச் 31-ந் தேதி மருத்துவமனையில் 294 பேரும் வீட்டு தனிமையில் 780 பேர் உள்பட 1074 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

கடந்த 17 நாட்களில் கொரோனா பரவல் அதிகரித்து 5640 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 23 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். சிகிச்சை முடிந்து சென்றவர்களை தவிர்த்து தற்போது 721 பேர் மருத்துவமனையிலும் 3369 பேர் வீட்டு தனிமை உள்பட 4090 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா அதிகரிப்பால் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஜிப்மர் மருத்துவமனை ஆகியவற்றில் நோயாளிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ரத்த அழுத்தம் நீரழிவு நோய் உள்ளிட்ட இணை நோய் உள்ளவர்கள் மட்டும் மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர்.

மற்றவர்கள் வீட்டில் தனிமையில் இருக்க அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதே வேகத்தில் தொற்று பரவினால் இந்த மாதம் இறுதியில் மருத்துவமனையில் 3 ஆயிரம் பேரும், 6 ஆயிரம் பேர் வீடுகளிலும் இருக்க வாய்ப்புள்ளதாக கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கேற்றார்போல் படுக்கை வசதிகள் மற்றும் வெண்டிலேட்டர்களை தயாராக வைத்திருக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது தினசரி 500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதால் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகங்கள் திணறி வருகின்றன.