புதுச்சேரி பல்கலைக்கழகம் ஐந்து நாட்கள் மூடப்பட உள்ளது

கொரோனா தொற்று அதிகரிப்பால் புதுச்சேரி பல்கலைக்கழகம் இன்று முதல் வருகிற 27-ந் தேதி வரை மூட்படுகிறது.

புதுச்சேரி பல்கலைக்கழக ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் தொடர்புடைய நபர்களிடம் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று 23-4-2021 முதல் 27-4-2021 வரை 5 நாட்கள் பல்கலைக்கழகம் மூடப்படும்.

பல்கலைக்கழகத்தின் அத்தியாவசிய பணிகளுக்கு இந்த மூடல் பொருந்தாது.

விடுதிகளில் தங்கி உள்ள பி.எச்.டி. ஆராய்ச்சியாளர்கள், மாணவ-மாணவிகள் வருகிற 25-ந் தேதிக்குள் காலி செய்ய வேண்டும்.

விடுதிகள் திறக்கும் தேதி பல்கலைக்கழக இணைய தளத்தில் வெளியிடப்படும். விடுதிகளில் இருந்து புறப்படும் போது தங்கள் அறைகளில் வைத்துள்ள விலை மதிப்புள்ள சாதனங்கள், லேப்-டாப், செல்போன், கல்வி சான்றுகள் ஆகியவற்றை பத்திரமாக கையோடு எடுத்து செல்வது அவசியம்.

விடுதிகளில் தங்கி உள்ள மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கும், உள்ளூர் பாதுகாவலருக்கும் தகவல் தெரிவிக்கப்படும்.

உணவு விடுதி வருகிற 26-ந் தேதி முதல் மூடப்படும்.

அதுபோல் விடுதியில் தங்காத இதர பி.எச்.டி. ஆராய்ச்சியாளர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்கள் ஆகியோரும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் வர அனுமதி இல்லை என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.