கர்ப்பிணிகளை அலைகழிக்கக்கூடாது மருத்துவர்களுக்கு கவர்னர் அறிவுரை

கர்ப்பிணிகளை அலைகழிக்கக்கூடாது மருத்துவர்களுக்கு கவர்னர் அறிவுரை

புதுச்சேரி, மே 3: புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு மகளிர்
மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு
வரும் கர்ப்பிணிகளிடம் கொரோனா சான்றிதழ் கேட்டு
திருப்பி அனுப்பப்படுகிறார்கள். இதனால் பரிசோதனை
செய்து கொள்வதற்காக, பெண்கள் அரசு மருத்துவம்
னைகளுக்கு சென்று காத்திருக்க வேண்டிய நிலை
உள்ளது. இந்நிலையில் கவர்னர் தமிழிசை சவுந்தரரா
ஜன் நேற்று ராஜீவ்காந்தி மகளிர் மருத்துவமனைக்கு
சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, மருத்துவமனை
கண்காணிப்பாளர் மற்றும் மருத்துவர்களிடம் ஆலோ
சனை நடத்திய கவர்னர் நடைமுறை சிக்கல்கள் குறித்து
கேட்டறிந்தார்.
அப்போது, சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகளை
அலைகழிக்க வேண்டாம். அவர்களுக்கு சிரமங்கள் ஏற்
படாமல் பார்க்க வேண்டும். பரிசோதனை செய்யப்பட
வில்லை என்பதற்காக யாரையும் திருப்பி அனுப்பவோ
மருத்துவமனையில் சேர்வதை மறுக்கவோ கூடாது.
மருத்துவமனை வளாகத்தில் உடனடியாக, கர்ப்பிணி
களுக்கான கொரோனா பரிசோதனை மையம் அமைக்க
வேண்டும். நாளை (இன்று) முதல் அது செயல்படுவ
தாக இருக்க வேண்டும். பரிசோதனை முடிவுகளை
உடனடியாக வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவசர சிகிச்சைக்கு வருபவர்களுக்கு உதவி செய்ய
ஊழியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அதனை
கண்காணிக்க வேண்டும். மருத்துவமனைக்கு வருப
வர்களிடம் துண்டு பிரசுரங்கள் மூலமாக கொரோனா
குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று
அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.