முதலமைச்சர் ரங்கசாமி ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ்: என்.ஆர்.காங்கிரசார் மகிழ்ச்சி

Breaking news: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உடல்நிலை சீராகி வருவதால், ஓரிரு நாட்களில் மருத்துவமனையில் இருந்து புதுச்சேரி திரும்ப உள்ளார்.

முதலமைச்சர் ரங்கசாமி ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ்: என்.ஆர்.காங்கிரசார் மகிழ்ச்சி

புதுச்சேரி மாநில முதலமைச்சராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கடந்த 7ம் தேதி பதவியேற்றார். பதவியேற்பிற்கு மறுநாள் லேசான உடல் உபாதைகள் ஏற்பட்டதால், முதல்வர் ரங்கசாமி கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனையில் கடந்த 9ம் தேதி அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மறுத்தவர்கள் பரிசோதனையில், முதல்வர் ரங்கசாமிக்கு நோய் தொற்று தீவிரம் குறைவாகவும், உடல் நிலை சீராக இருப்பதும் தெரியவந்தது. மேலும் இரண்டு நாள் சிகிச்சையில் ரங்கசாமி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் விரைவில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, புதுச்சேரி திரும்ப வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலமைச்சர் ரங்கசாமி உடநலம் பெற வேண்டி என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகள் தொடர் வேண்டுதலில் ஈடுபட்டனர். அது மட்டுமல்லாமல் புதுச்சேரி மக்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் முதலமைச்சர் ரங்கசாமி நலம்பெற வாழ்த்தினர்.

முதலமைச்சர் ரங்கசாமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ள தகவல் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

source https://munneru.com/cm-rangasamy-returning-soon-to-pondicherry/