புதுச்சேரி 7 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

புதுச்சேரி சட்டசபை தேர்தலை நேர்மையாக நடத்தவும், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் மற்றும் மதுபானங்கள் கொடுப்பதை தடுக்கவும் தேர்தல் பறக்கும் படையினர் உள்ளூர் போலீசாருடன் சேர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

7 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை
வருமான வரித்துறை சோதனை
அதன்படி புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள பைனான்ஸ், நிறுவனங்கள் மற்றும் போர்வால் வட்டி கடை ஆகியவற்றில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதேபோல் புதுவை இளங்கோ நகர், எல்லைபிள்ளைச்சாவடி பெரியார் நகர், லாஸ்பேட்டையில் உள்ள 4 பைனான்சியர் வீடுகளிலும் சோதனை நடந்தது. மொத்தம் 7 இடங்களில் நடந்த இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.