மு.க.ஸ்டாலின் 3-ந்தேதி புதுவையில் பிரசாரம் | Stalin half day campaign in Puducherry on 3rd April

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் தற்போது பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தி.மு.க.- காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அவர் ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்த நிலையில் வருகிற 3-ந்தேதி மு.க.ஸ்டாலின் புதுவையில் பிரசாரம் செய்கிறார். அன்று மாலை 3.30 மணிக்கு காரைக்காலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.

அப்போது அவர் தி.மு.க.-காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

பொதுக்கூட்டம் முடிந்ததும் அங்கிருந்து மாலை 5.30 மணிக்கு புதுவை வருகிறார். புதுவையில் அவர் பிரசாரம் செய்கிறார். தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசுகிறார்.

புதுச்சேரியில் தனித்து போட்டி என்று கூறிய தி.மு.க இப்போது காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிடுகின்றது. தி.மு.க தலைவர் ஸ்டாலின் மொத்தமாக புதுச்சேரி பிரச்சாரத்திற்கு அரை நாள் மட்டுமே ஒதுக்கி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது