தவளக்குப்பம் சந்திப்பில் ஒரு மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பிப்பு | Thavalakuppam area traffic block due to political campaign

புதுச்சேரி; தவளக்குப்பம் சந்திப்பில் காங்.,வேட்பாளர் அனந்தராமனை ஆதரித்து, கடலுார் சாலையை மறித்து நடந்த தேர்தல் பிரசாரத்தால், ஒரு மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. புதுச்சேரி மணவெளி காங்., வேட்பாளர் அனந்தராமனை ஆதரித்து, முன்னாள் முதல்வர் நாராயண சாமி நேற்று மாலை தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பில் பிரசாரம் செய்தார்.

மாலை 6:30 மணிக்கு துவங்கி பிரசாரத்திற்காக கடலுார் சாலை, அபிேஷகப்பாக்கம் சாலை, புதுச்சேரி சாலை, நல்லவாடு சாலை ஆகிய நான்கு பக்க சாலையிலும் போலீசார் போக்குவரத்தை நிறுத்தினர். இதனால் நான்கு பக்க சாலையிலும் 2 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்றது. வெகுநேரம் காத்திருந்த வாகனங்களும், மொத்தமாக ஹாரன் ஒலி எழுப்பினர். பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக, 7:10 மணிக்கு, பிரசாரத்தை முடித்து கொண்டு அனந்தராமன், நாராயணசாமி பிரசார வாகனம் நகர்ந்தது. அதன்பின்பு, 7:30 மணிக்கு பிறகு போக்குவரத்து சீராக ஆரம்பித்தது. எப்போதும் பிசியாக உள்ள கடலுார் சாலையில் போக்குவரத்தை நிறுத்தி நடந்த தேர்தல் பிரசாரத்தால், தவளக்குப்பம் மக்கள் மட்டுமின்றி, கடலுார் மார்க்கம் சென்ற வாகன ஓட்டிகள் எரிச்சல் அடைந்தனர்.