≡ Menu

புதுவையில் 54 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது | Puducherry pending criminal cases on all election candidates list

புதுவை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீதான வழக்குகள், கல்வித்தகுதி தொடர்பாக தேர்தல் கண்காணிப்பகம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் குற்றப்பின்னணி வேட்பாளர்களில் ஆய்வு செய்யப்பட்ட 323 பேரில் 54 பேர் மீது (17 சதவீதம்) கிரிமினில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 28 பேர் மீது (9 சதவீதம்) கொலை, கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்ற கடுமையான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

2 வேட்பாளர்கள் மீது கொலை வழக்கும், ஒரு வேட்பாளர் மீது கொலை முயற்சி வழக்கும். ஒரு வேட்பாளர் மீது பெண்ணை மானபங்கம்படுத்தி தாக்கிய வழக்கும் உள்ளது. இது கடந்த 2016 தேர்தலில் 30 பேராக இருந்தது.

கடுமையான கிரிமினல் வழக்குகள் விவரம்:

அ.தி.மு.க.வில் 5 வேட் பாளர்களில் 2 பேர் மீதும் (40 சதவீதம்), பா.ஜனதாவில் 9 வேட்பாளர்களில் 2 பேர் மீதும் (22 சதவீதம்), காங்கிரசில் 14 வேட்பாளர்களில் 2 பேர் மீதும் (14 சதவீதம்), என்.ஆர்.காங்கிரசில் 16 வேட்பாளர்களில் ஒருவர் மீதும் (6 சதவீதம்), சுயேட்சை வேட்பாளர்களில் 96 பேரில் 4 பேர் மீதும் (4 சதவீதம்) கடுமையான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.