≡ Menu

திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு குடும்பம்தான் முக்கியம்- பிரதமர் மோடி | PM Modi speech in Dharapuram

பிரதமர் மோடி உரையில் குறிப்பிடத்தக்கவை:

* தமிழக கலாசாரத்தை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது.

* உலகின் தொன்மையான மொழியான தமிழில் ஓரிரு வார்த்தைகள் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது

* பாஜகவுக்கு வளர்ச்சிதான் முக்கியம். ஆனால் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு குடும்பம்தான் முக்கியம்

* திமுக காங்கிரஸ் கூட்டணியை தமிழக மக்கள் கவனித்து கொண்டுதான் வருகிறார்கள்.

* முதல்வர் பழனிசாமியின் தாயார் குறித்து திமுக அவமதித்தது கண்டிக்கத்தக்கது.

* பெண்கள் குறித்து திமுகவின் திண்டுக்கல் லியோனியும் கீழ்த்தரமாக விமர்சித்துள்ளார்.

* ஒரு வேளை திமுக-காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து விட்டால் இன்னும் பெண்களை இழிவுபடுத்துவார்கள்.

* திமுகவும் காங்கிரஸ் கட்சியும் தங்கள் கட்சி தலைவர்களை கட்டுப்படுத்துங்கள்.

* திமுக பட்டத்து இளவரசருக்காக அக்கட்சியில் முக்கிய தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் மோடியின் உரையை வானதி சீனிவாசன் மொழிபெயர்த்து கூறினார்.