≡ Menu

புதுச்சேரியில் வரும் 14ம் தேதி வரை கொரோனா தடுப்பூசி திருவிழா நடக்கிறது; தகுதியான அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என, கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார். [continue reading…]

புதுச்சேரி; புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் 180 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.புதுச்சேரியில் நேற்று முன்தினம் 2702 பேருக்கு நடத்திய கொரோனா பரிசோதனையில், புதுச்சேரியில் 144 பேர், காரைக்காலில் 31, ஏனாமில் 2, மாகியில் 3 பேர் உட்பட 180 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மாநிலத்தின் மொத்த பாதிப்பு 42 ஆயிரத்து 539 ஆனது. 390 பேர் மருத்துவமனையிலும், 1287 பேர் வீடுகளில் சிகிச்சையில் உள்ளனர்.நேற்று முன்தினம் புதுச்சேரியில் 60, காரைக்காலில் 34, மாகியில் ஒருவர் உட்பட 95 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இது வரை 40 ஆயிரத்து 178 பேர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளனர். நேற்று இறப்பு இல்லை. மாநிலத்தின் உயிரிழப்பு 684 ஆக உள்ளது.நேற்று முன்தினம் 48 சுகாதார பணியாளர்கள், 9 முன் கள பணியாளர்கள், 374 பொது மக்கள் உட்பட இது வரை 80 ஆயிரத்த 629 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட் டுள்ளது.

புதுச்சேரி – கடலூர்  சாலையில் உள்ள AFT திடலில் தி.மு.க பிரச்சார பொதுக்கூட்டம் 3/4/2021 நடந்தது. இதில்  தி.மு.க தலைவர்  ஸ்டாலின் பங்கேற்று தேர்தல் பரப்புரை நிகழ்த்தினார்.

புதுவை சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், தி.மு.க. 13 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

புதுவையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்  பிரசாரம். அவர் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசினார்.

புதுச்சேரியில் மதச்சார்பற்ற அணியில் காங்கிரஸ், தி.மு.க, சி.பி.ஐ, விடுதலைச் சிறுத்தைகள்  அணியின்  29 வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பேசினார். பொதுக்கூட்ட மேடை ஏறாமல் வேனில் இருந்தபடி பேசிய ஸ்டாலின், ‘தமிழகத்தில் 234 தொகுதிகளில் 55 கூட்டங்களில் பேசி உள்ளேன். இன்று 56வது கூட்டத்தில் பேசுகிறேன். தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தலில் மதசார்பற்ற அணி மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறது. அதுபோல் புதுச்சேரியிலும் வெற்றியை தேடி தர வேண்டும் என்றார்.

மொத்தம் 74 வேட்பாளர்கள் சொத்து மதிப்பு 1 கோடியை தாண்டுகிறது

1. நேரு (எ) குப்புசாமி  (சுயேச்சை) – 43 கோடி
2. N ரங்கசாமி (NR காங்கிரஸ் ) – 38 கோடி
3. A V சுப்ரமணியன் (காங்கிரஸ் ) – 27 கோடி

புதுச்சேரியில் நேற்றைய தினம் 127 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்த நிலையில் நேற்று தொற்று எண்ணிக்கை 260-ஐ தொட்டது . இது  ஒரே நாளில் இரு மடங்காக உயர்ந்தது [continue reading…]

புதுவை சட்டசமன்ற தேர்தலில் பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரி [continue reading…]